போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வுக்கு ரூ. 3028 கோடி நிதி தேவைப்படும்

By செய்திப்பிரிவு

சென்னை: போக்கு​வரத்து ஓய்வூ​தி​யர்​களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வு வழங்க ரூ.3,028 கோடி தேவைப்​படும் என போக்குவரத்​துத் துறை தெரி​வித்​துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறிய​தாவது: நிதி பற்றாக்​குறை உள்ளிட்ட காரணங்​களால் போக்கு​வரத்​துக் கழக ஓய்வூ​தி​யர்​களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்​கப்​பட​வில்லை.

இதுதொடர்பாக நீதி​மன்​றத்​தில் உள்ள பல்வேறு வழக்​கு​களில் அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தர​விடப்​பட்​டுள்​ளது. இதன் தொடர்ச்​சியாக அகவிலைப்படி உயர்வு வழங்க தேவையான தொகை குறித்து கணக்​கீடு செய்​யப்​பட்​டது. அதன்​படி, நடப்​பாண்டு அக்டோபர் மாதம் வரையிலான கால கட்டத்​தில் அகவிலைப்படி உயர்வு வழங்க ரூ.3,028.75 கோடி தேவைப்​படு​கிறது. மேலும், மாதந்​தோறும் அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்​டு​மானால் கூடு​தலாக ரூ.73.42 கோடி தேவைப்​படு​கிறது. இதனை வழங்​குவது குறித்து அரசு முடிவு செய்​யும். இவ்வாறு அவர்கள் தெரி​வித்​தனர்.

இதுதொடர்பாக தொழிற்​சங்​கத்​தினர் கூறும்​போது, "அகவிலைப்படி உயர்வு வழங்​கு​வதற்கு எதிரான அரசின் மேல்​முறை​யீட்டு மனுக்கள் நீதி​மன்​றத்​தால் தொடர்ச்​சியாக தள்ளுபடி செய்​யப்​படு​கின்றன. எனவே, காலம் தாழ்த்​தாமல் குறைவாக ஓய்வூ​தியம் பெறும் ஓய்வூ​தி​யர்​களின் நலன் கருதி அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு முன்வர வேண்​டும்" என்றனர்.

பணப்​பலன்கள் எப்போது? - போக்கு​வரத்து ஓய்வூ​தி​யர்​களுக்கு பல்வேறு பிரச்​சினைகள் இருந்து வருகிறது. அவர்​களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு மறுக்​கப்​பட்​டுள்​ளது. நிதி பற்றாக்​குறையை காரணம் காட்டி ஓய்வு பெறும் ஊழியர்​களுக்கு ஓய்வு பெறும் நாளில் ஓய்வு கால பணப்​பலன்கள் வழங்​கப்​படு​வ​தில்லை. ஓய்வு பெறு​வோர் வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்​பப்​படு​வதாக தொழிற்​சங்​ககத்​தினர் தொடர் குற்​றச்​சாட்டை முன்​வைத்து வருகின்​றனர். இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்​டங்​களும் நடத்​தப்​பட்​டுள்ளன.

அரசின் பதில்: இந்நிலை​யில், பணப்​பலன் வழங்​குவது தொடர்பாக தொழிற்​சங்​கத்​தினர் தரப்​பில் அரசிடம் கேள்வி எழுப்​பப்​பட்​டிருந்​தது. இதற்கு மாநகர போக்கு​வரத்​துக் கழகத்​தின் தலைமை நிதி அலுவலர் அளித்த பதிலில், "தமிழ்​நாடு அரசு போக்கு​வரத்​துக் கழக ஓய்வூதிய நிதி​யத்​தின் மூலம் ஆணை பெறப்​பட்​ட​வுடன், 2023-ம் ஆண்டு ஏப்​ரல் ​முதல் ஓய்வு பெற்​றவர்​களுக்​கு பணப்​​பலன்​ வழங்​க நட​வடிக்​கை மேற்​கொள்​ளப்​படும்​" என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்