சென்னை - மைசூரு அதிவிரைவு ரயில் சாதாரண விரைவு ரயிலாக ஜன.3 முதல் மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை - மைசூரு இடையிலான அதிவேக விரைவு ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு, வரும் ஜன.3-ம் தேதி முதல் சாதாரண விரைவு ரயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - மைசூரு அதிவிரைவு ரயில், மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு பெங்களூருவை அடையும். இரவு 10 மணிக்கு மைசூருவை சென்றடையும். இந்த ரயில் 23 நிலையங்களில் நின்று செல்கிறது. 497 கி.மீ. தூரத்தை 9 மணி 15 நிமிடங்களில் கடக்கும் இந்த ரயில் சராசரியாக மணிக்கு 54 கிமீ வேகத்தை கொண்டிருக்கிறது. இந்த ரயில் முதலில், சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்பட்டது. இதன்பிறகு, 2019-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து மைசூரு வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த அதிவிரைவு ரயில் ஜன.3-ம் தேதி முதல் சாதாரண விரைவு ரயிலாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரயிலின் குறைந்தபட்ச சராசரி வேகமான 55 கி.மீ. வேகத்தை பராமரிக்கத் தவறியதால், இந்த ரயில் சாதாரண ரயிலாக மாற்றப்படவுள்ளது.

ரயில் பயணிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், வணிகர் சங்கங்கள் மற்றும் பிற பிரதிநிதிகள் ஆகியோர் இந்த ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்க வேண்டும் என கோரினர். இந்த கோரிக்கைக்கு ஏற்ப, கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டதால், இந்த ரயிலின் சராசரி வேகத்தை பராமரிக்க முடியாத ஏற்பட்டது.

இதையடுத்து, சாதாரன ரயிலாக மாற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ரயில் கட்டணமும் குறைக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை - மைசூரு இன்டர்சிட்டி விரைவு ரயில் கட்டணம் இரண்டாம் வகுப்பு இருக்கைக்கு ரூ.15-ம், சேர்கார் வகுப்புக்கு ரூ.45-ம் குறையும். இதுபோல, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் விரைவு ரயிலில் பயணிப்பவர்களுக்கான சீசன் டிக்கெட் கட்டணம் கணிசமாக குறையும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்