ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தொடக்கத்திலேயே தடுக்க வேண்​டும்: இடதுசாரி கட்சிகள் கருத்து

By செய்திப்பிரிவு

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும், மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் "ஒரே நாடு; ஒரே தேர்தல்" சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வரும் 16-ம் தேதி தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபனையால் 16-ம் தேதி நிகழ்ச்சி நிரலில் இந்த மசோதா இடம் பெறவில்லை. அதேநேரத்தில், இந்த கூட்டத் தொடரிலேயே இந்த மசேதாவை மத்திய அரசு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருசேர எதிர்க்க வேண்டியது அவசியமாகும்.

இந்தச் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டுமானால் அரசியல் சட்டத்தில் 6 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த அரசியல் சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம். ஆனால், இரு அவைகளிலும் பாஜகவுக்கோ, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ அத்தகைய பெரும்பான்மை இல்லை. இது நன்றாகத் தெரிந்தும், இந்த சட்ட மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு அரசு துடிக்கிறது.

2029-ம் ஆண்டு முதல் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படியானால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பல மாநில அரசுகளைக் கலைக்க வேண்டியிருக்கும். மாநில சட்டப் பேரவைகளில் எந்த ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் மத்திய அரசே அந்த மாநில நிர்வாகத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்படும்.

அவசர கோலத்தில் அள்ளித் தெளிப்பதுபோல இந்தச் சட்டமுன்வரைவை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டியது கட்டாயமாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்