சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்கள் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கமளித்துள்ளது.
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது. அவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. நிதிபற்றாக்குறையை காரணம் காட்டி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கப்படுவதில்லை.
ஓய்வு பெறுவோர் வெறும் கையுடன் வீட்டுக்கு அனுப்பப்படுவதாக தொழிற்சங்ககத்தினர் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பணப்பலன் வழங்குவது தொடர்பாக தொழிற்சங்கத்தினர் தரப்பில் அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தலைமை நிதி அலுவலர் அளித்த பதிலில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி நம்பகத்தின் மூலம் ஆணை பெறப்பட்டவுடன் 2023-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
» ‘உ.பி.யை அரசியல் பரிசோதனை கூடமாக இயக்குகிறது பாஜக’ - கி.வீரமணி
» ‘தமிழர்களின் நலன் காக்கப்பட திமுக ஆட்சியில் இருக்க வேண்டும்’ - அமைச்சர் தங்கம் தென்னரசு
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago