‘அதிமுகவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது’ - பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தும் நாட்கள் கூட குறைந்திருக்கிறது. இதுவே அதிமுகவின் எழுச்சி. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியில் அமரும்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. தேர்தல் கூட்டணி சரியாக அமையவில்லை என்றார்கள். கூட்டணி வரும் போகும். ஆனால் அதிமுகவின் கொள்கை நிலையானது. தமிழகத்தில் தனித்து நின்று ஆட்சி அமைத்த ஒரே கட்சி அதிமுகதான். கடந்த 2021 ஆம் ஆண்டு வெறும் 1.98 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக ஆட்சியில் அமர்ந்தது. தேர்தலின் போது 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியது.

இன்று டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 3,600 கோடி வசூல் கிடைக்கிறது

சட்டப்பேரவை நாட்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு காரணம் பயம்தான். அதிமுகவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. இரண்டு நாட்கள் மட்டும் சட்டப்பேரவையை நடத்தியுள்ளார்கள். அதில் ஒரு நாள் மட்டும் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி. அதுவும் பிரதான எதிர்க்கட்சியான எங்களுக்கு 10 நிமிடங்கள் தான் அனுமதி. சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை என்பார்கள். ஆனால் நான் பேசும்போது அதனைத் துண்டிப்பார்கள். சட்டப்பேரவையில் நான் பேசியதை ஒளிபரப்பி இருந்தால் திமுக் அரசே இருந்திருக்காது

200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அக்கட்சியின் எம்.பி. கனிமொழி கூறுகிறார். இது திமுகவின் பகல் கனவு. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியில் அமரும். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்