ஸ்ரீவில்லிபுத்தூர்: சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.
அதிமுகவை ஒருங்கிணைப்பது, கூட்டணி குறித்து மூத்த நிர்வாகிகள் இடையே பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில் சென்னையில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக உரிமை மீட்பு குழுக் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தனது குலதெய்வமான செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இன்று கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து, பொங்கலிட்டு வழிபாடும் நடத்த உள்ளார்.
» ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை: தமிழக அரசு அறிவிப்பு
» “என்னை நீக்க வலியுறுத்தியது திமுக-வின் மன்னராட்சி மனப்பான்மை!” - ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி
அவரிடம் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கோயிலுக்கு வந்த இடத்தில் அரசியல் பேசக்கூடாது” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago