சென்னை: உதவி செயற்பொறியாளரின் இடைநீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அதற்கு விளக்கமளிக்காமல் இடை நீக்கத்தை ரத்து செய்த சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சிஎம்டிஏ) கடந்த 2012-ம் ஆண்டு உதவிப் பொறியாளராக பணியில் சேர்ந்த செல்வ நாயகத்துக்கு, கடந்தாண்டு உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து செல்வநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடையுத்தரவு பெற்றதால், இடைநீக்கத்தை உறுப்பினர் செயலரும் ரத்து செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சிஎம்டிஏ-வில் உதவி செயற்பொறியாளராக நியமிக்கப்பட்ட தன்னை இடைநீக்கம் செய்ய உறுப்பினர் செயலருக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது இடை நீக்கத்தை ரத்து செய்து உறுப்பினர் செயலர் உத்தரவிட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, மனுதாரருக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். இடைநீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அதற்கு பதிலளிக்காமல் இடைநீக்கத்தை தானாக ரத்து செய்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும் எனக்கூறி சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago