சென்னை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24 அடி. இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரியிலிருந்து நேற்று முன்தினம் காலை 10.30 மணி அளவில் விநாடிக்கு 4,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. நேற்று (டிச.14) காலை 10.00 மணி நிலவரப்படி, நீர் இருப்பு 22.76 அடியாகவும், கொள்ளளவு 3,315 மில்லியன் கன அடியாகவும் மற்றும் நீர் வரத்து விநாடிக்கு 2,450 கன அடியாகவும் இருந்தது. பிற்பகல் 12.00 மணி அளவில் விநாடிக்கு 6,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே, ஏரியிலிருந்து வெளியேறும் நீர் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புழல் ஏரி: புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21.20 அடி. இதன் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. இங்கும் தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரியிலிருந்து நேற்றுமுன்தினம் காலை 9.00 மணி அளவில் விநாடிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது.
நேற்று காலை 10.00 மணி நிலவரப்படி, நீர் இருப்பு 19.72 அடியாகவும், கொள்ளளவு 2,956 மில்லியன் கனஅடியாகவும் மற்றும் நீர்வரத்து விநாடிக்கு 709 கன அடியாகவும் இருந்தது. பிற்பகல் 12.00 மணி அளவில் விநாடிக்கு 1,000 கனஅடியாக உபரி நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, புழல் ஏரியில் இருந்து நீர் வெளியேறி செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக நீர்வளத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago