மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம் சார்பில் தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு 5 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் பெரியகருப்பன் வாழ்த்து பெற்றார்.
இதுதொடர்பாக தமிழக கூட்டுறவு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை எளிதாக்கவும், கூட்டுறவு கடன்களை மேம்படுத்தவும் மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம் கடந்த 1964-ம் ஆண்டு நிறுவப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில கூட்டுறவு வங்கிகளும் இதில் உறுப்பினர்களாக உள்ளன.
கூட்டுறவு அமைப்புகளின் கீழ் சிறப்பாக செயல்படும் தலைமை வங்கி, மாவட்ட மத்திய வங்கி, கூட்டுறவு கடன் சங்கங்கள், தலைமை வங்கியின் கீழ் செயல்படும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இந்த இணையம் ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.
தேசிய இணையத்தின் வைர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கடந்த 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு 5 விருதுகள் வழங்கப்பட்டன. இதன்படி, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் நடத்தப்படும் விவசாய கூட்டுறவு பணியாளர் பயிற்சி நிலையம் 2023-24-ம் ஆண்டில் தேசிய அளவில் சிறந்த பயிற்சி நிலையமாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு வழங்கப்பட்டது. கூட்டுறவு கடன் கட்டமைப்பில் 2022-23-ம் ஆண்டில் ஒட்டுமொத்த சிறந்த செயல்பாட்டுக்கான 3-ம் பரிசு தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது.
» திண்டுக்கல் தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த தனியார் மருத்துவமனையில் நிபுணர்கள் ஆய்வு
» டெல்டாவில் 3 நாளாக தொடரும் மழையால் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின
குறுகியகால கூட்டுறவு கடன் கட்டமைப்பில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த வங்கி சேவை வழங்கி வருவதற்காக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு 2022-23-ம் ஆண்டில் சிறந்த செயல்பாட்டுக்கான 3-ம் பரிசு வழங்கப்பட்டது. இந்த விருதுகளை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா வழங்க, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் இந்த விருதுகளை நேற்று காண்பித்து அமைச்சர் பெரியகருப்பன் வாழ்த்து பெற்றார். கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago