8 மாவட்டங்களில் மாவட்ட தலைவர் பதவி காலி - இதுதான் தமிழக காங்கிரஸின் நிலை!

By கி.தனபாலன்


“காமராஜர் ஆட்சியை நோக்கித்தான் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. ஆனால், தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மாவட்ட தலைவர்களையே நியமிக்க முடியாத நிலையை வைத்துக் கொண்டு என்ன தைரியத்தில் அவர் இப்படிச் சொல்கிறார் என்று தெரியவில்லை. ​

ராம​நாத​புரம், திருநெல்​வேலி, திண்​டுக்​கல், சென்னை​யில் 2 மாவட்​டங்கள் என மொத்தம் 8 மாவட்ட காங்​கிரஸ் தலைவர் பதவி இப்போது காலியாக உள்ளது. இந்த மாவட்​டங்​களுக்​கெல்​லாம் பொறுப்​புக் குழுவை நியமித்து பொழுதைக் கடத்​திக் கொண்டிருக்​கிறார்​கள். இதனால், பொறுப்​புக் குழுக்​குள்​ளேயே யார் பெரியவர் என்ற ஈகோ யுத்தம் பஞ்சமில்​லாமல் நடந்து கொண்​டிருக்​கிறது. இதனால், யாருக்​குப் பின்​னால் செல்வது என்று புரி​யாமல், இருக்​கும் கொஞ்ச நஞ்ச காங்​கிரஸ்​காரர்​களும் குழம்​பிப்​போய் நிற்​கிறார்​கள். ராமநாத​புரம் மாவட்ட காங்​கிரஸ் தலைவராக இருந்த கல்வி நிறு​வனங்​களின் நிர்​வாகி செல்​லத்​துரை அப்துல்லா, தனக்கு இந்தப் பதவி வேண்​டாம் என்று சொல்லி 2022-ல் நாசூக்காக ஒதுங்​கிக் கொண்​டார்.

இதையடுத்து திரு​வா​டானை எம்எல்​ஏ-வான கருமாணிக்​கத்தை ஒருங்​கிணைப்​பாளராக போட்டு 9 பேர் கொண்ட பொறுப்​புக் குழுவை நியமித்து கட்சியை வளர்க்கச் சொன்னது மாநில காங்​கிரஸ் தலைமை. வழக்கம் போல இங்கே​யும் யார் சொல்​வதைக் கேட்பது என்ற சர்ச்சை வெடித்​தது. இதில், மாவட்ட தலைவர் பதவியை பிடிக்க கருமாணிக்​க​மும், பொறுப்​புக்​குழு​வில் உள்ள நகராட்சி கவுன்​சிலர் ராஜா​ராம் பாண்​டியனும் ஆளுக்​கொரு பக்கம் களப்​பணி​யில் இருக்​கிறார்​கள்.

இதில், ராஜா​ராம் பாண்​டியனை மாவட்ட தலைவ​ராக்க பொறுப்​புக் குழு​வில் உள்ள சிலரே மெனக்​கிடு​வ​தாகச் சொல்​லப்​படு​கிறது. இன்னொரு தரப்போ, “மாவட்​டத்தை இரண்டாக பிரித்து இரண்டு பேரை தலைவ​ராக்​கிட்டா போச்சு” என்று புது யோசனை சொல்​லிக் கொண்​டிருக்​கிறது. கடந்த சில மாதங்​களுக்கு முன்பு மாவட்ட காங்​கிரஸ் நிர்​வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்​துக்காக ராமநாத​புரம் வந்திருந்​தார் மாநில காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்​தகை.

அந்தக் கூட்​டத்​தில் பேசிய காங்​கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவரும் கருமாணிக்​கத்​தின் தந்தை​யுமான கே.ஆர்​.​ராம​சாமி, “தேசிய கட்சியான காங்​கிரஸுக்கு ஒரு வருடத்​துக்​கும் மேலாக மாவட்ட தலைவரை நியமிக்க முடி​யாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்​கிறது. இப்படி இருந்​தால் நாம் எப்படி கட்சியை வளர்க்க முடி​யும்?” என ஆதங்​கத்​தைக் கொட்​டி​னார். இதற்கு பதிலளித்த செல்​வப்​பெருந்​தகை, “அகில இந்திய தலைமைக்கு தகவல் தெரி​வித்து​விட்​டோம். இந்த விஷயத்​தில் விரை​வில் அவர்கள் நல்ல முடி​வெடுப்​பார்​கள்” என்று சொன்​னார்.

அவர் இப்படிச் சொல்லி மாதக் கணக்​கிலாகி​யும் காங்​கிரஸ் தலைமை அந்த நல்ல​முடிவை இன்னும் எடுத்​த​பாடில்லை. இதுகுறித்து கே.ஆர்​.​ராம​சாமி​யிடம் கேட்​ட​போது, “அகில இந்திய தலைமை தான் முடி​வெடுத்து மாவட்ட தலைவர்களை நியமிக்க வேண்​டும். பல மாநிலங்​களில் தேர்தல் நடப்​ப​தால் கட்சித் தலைமை அதில் கவனம் செலுத்தி வருவ​தாகச் சொல்​லப்​பட்​டது. இப்போது தேர்​தல்கள் முடிந்​து​விட்டன. இதுபற்றி கட்சி தலைமை​யிடம் நான் முன்பே தெரி​வித்து​விட்​டேன்.

கட்சிக்கு மாவட்ட தலைவர்கள் இல்லாதது பெரிய பின்னடைவு தான். இதனால் கட்சியை பலப்​படுத்த முடி​யாது. மாநில கமிட்டியும், அகில இந்திய தலைமை​யும் தான் இந்த விஷயத்​தில் விரை​வில் நல்ல முடி​வெடுக்க வேண்​டும்” என்​றார். களப்பணி செய்​யாதவர்களை எல்​லாம் கட்​சி​யில் ​வைத்​திருப்​ப​தில்லை என ​முடி​வெடுத்​திருப்​ப​தாகச் சொல்​லும் செல்​வப்​பெருந்​தகை, ​மாவட்ட தலை​வர்​கள் நியமனத்​தி​லும் ​கொஞ்​சம்​ மெனக்​கிடலாமே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்