‘நீல் கிரந்தி’ திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை வைத்துள்ள விவசாயிகள் அவற்றில் மீன் வளர்ப்பதற்கு 40 முதல் 60 சதவீதம் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று தேசிய மீன் வள மேம்பாட்டு வாரியம் தெரி வித்துள்ளது.
மீன்களின் உற்பத்தியைப் பெருக் குவதோடு, மீனவர்கள் மற்றும் விவ சாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவதற்காக, மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நீல் கிரந்தி (நீலப் புரட்சி) என்ற திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டத்தின்படி, உள்நாட்டு மற்றும் கடலில் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்தி அதிகரிப்பது, மீன் களின் உற்பத்தியைப் பெருக்கு வது, மீனவர்கள் மற்றும் விவ சாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவது, உயிரி பாதுகாப்பு, மீன்பிடித் தொழில் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடா மல் பாதுகாப்பது, புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மீன் வளர்ப்புத் துறையை நவீனப் படுத்துவது, வரும் 2020-ம் ஆண்டுக்குள் மீன்களின் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயை மும்மடங்காக அதிகரிப்பது ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.
நீலப் புரட்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை வைத்துள்ள விவசாயிகள் அவற்றில் மீன் வளர்ப்பதற்கு 40 முதல் 60 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உலக சுகாதார நிறுவனம் தனி நபர் ஒருவருக்கு புரதச்சத்து கிடைக்க ஆண்டொன்றுக்கு 13 கிலோ எடையுள்ள மீன் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் தற்போது நபர் ஒருவருக்கு ஆண்டொன்றுக்கு 6.5 கிலோ எடை அளவுள்ள மீன் உணவு மட்டுமே கிடைக்கிறது. நாட்டிலேயே மிக அதிகபட்சமாக மேற்குவங்க மாநிலத்தில் 95 சதவீதம் பேர் மீன்களை உணவாக உண்ணுகின்றனர். தமிழகத்தில் 60 சதவீதம் பேர் மட்டுமே மீன்களை உண்கின்றனர்.
மீன்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற் போது கடலில் பிடிக்கப்படும் மீன்கள் மற்றும் உள்நாட்டில் வளர்க்கப்படும் மீன்கள் இத் தேவையை பூர்த்தி செய்யும் அள வில் இல்லை. இதன் காரணமாக, மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும் மத்திய அரசு நீலப்புரட்சி என்ற திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், மீனவர்கள் மட்டுமின்றி ஏற்கனவே விவசாயம் செய்து தற்போது தரிசு நிலங்களை வைத்துள்ள விவசாயிகளுக்கும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
இதன்படி, ஒரு ஏக்கர் தரிசு நிலம் வைத்துள்ள விவசாயி தனது நிலத்தில் குளம் அமைத்து மீன் வளர்க்க ரூ.7 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதில், பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த விவசாயிகளுக்கு 40 சதவீதமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 60 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தை ஆரம்பத்தில் மத்திய அரசு மட்டுமே வழங்கி வந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாநில அரசும் தன் பங்களிப்பாக இணைந்து மானியம் வழங்கி வருகிறது.
இந்த மானியத்தைப் பெற விவசாயிகள் திட்ட அறிக்கை ஒன்றை தயார் செய்து அருகில் உள்ள மீன்வளத் துறை அலு வலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அதை பரிசீலனை செய்து எங்களுக்கு பரிந்துரை செய்வர். அதனடிப்படையில், இந்த மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். இதேபோல், மீன் வளர்ப்பு சம்பந்தமான பல்வேறு திட்டங்களுக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது. தரிசு நிலங்களை வைத்துள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வருவாயை உயர்த்திக் கொள்வதோடு, நாட்டின் மீன் உற்பத்தித் தேவையையும் பூர்த்தி செய்யலாம். இவ்வாறு அதிகாரி கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago