திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு செங்கம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பேருந்து நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையின் உச்சியில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.
தீபத் திருவிழாவுக்கு கடந்த காலங்களைவிட, இந்தாண்டு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் என்பதால், 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 120 கார் பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வங்கக் கடலில், தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மழை பெய்தது.
இதன் தாக்கம், திருவண்ணாமலையில் சற்று கூடுதலாக இருந்தது. இதனால், சில தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் நிறுத்துமிடங்களை மழைநீர் சூழ்ந்தது. மழைநீரை வெளியேற்றி இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago