சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி புழல் ஏரியிலிருந்து காலை 9 மணி முதல் விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 4000 கனஅடி நீரும், பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு 16,000 கன அடி உபரி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே புழல் ஏரியின் மீகைநீர் கால்வாயின் வெள்ள தணிப்புக்காக ஏரியிலிருந்து இன்று 13.12.2024 காலை 09.00 மணியளவில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
புழல் ஏரியின் நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செம்பரம்பாக்கம் நிலவரம்: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அடையாற்றின் வெள்ள தணிப்புக்காக எரியிலிருந்து இன்று 8.00 மணியளவில் விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியானதால் தற்போது விநாடிக்கு 4000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
» தென் மாவட்டங்களில் கனமழை: தென்காசி அருகே தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து துண்டிப்பு
» 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
எனவே, ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர் காவனுர் குன்றத்துர், திருமுடிவாக்கம் வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பூண்டி நிலவரம்: பூண்டி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ச்சியாக உள்ளதால் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று 12122024 மாலை 5.00 மணி அளவில் விநாடிக்கு 5000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 13.122024 காலை 6.30 மணி அளவில் விநாடிக்கு 12,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. 10.30 மணி முதல் பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 16,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம். ஆட்ரம்பாக்கம். ஒதப்பை. நெய்வேலி, எறையூர். பீமன்தோப்பு. கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு. மெய்யூர், வெள்ளியூர். தாமரைப்பாக்கம். திருக்கண்டலம், ஆத்துர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம். மடியூர். சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம். இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர். சடையான்குப்பம்,எண்ணுர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்கமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago