இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்தி நிராகரிக்க முடியாத சக்தியாக உருவாக்குவோம்: இரா.முத்தரசன் உறுதி

By செய்திப்பிரிவு

கும்​பகோணம்: நூற்​றாண்டு கொண்​டாட்​டத்​தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பலப்​படுத்தி, நிராகரிக்​கப்பட முடியாத சக்தியாக உருவாக்கு​வோம் என்று அக்கட்​சி​யின் மாநிலச் செயலாளர் இரா.​முத்​தரசன் கூறினார்.

கும்​பகோணத்​தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின் மாநில நிர்​வாகக் குழு மற்றும் மாநிலக் குழு கூட்டம் கடந்த 10-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்​றது. நிறைவு நாள் நிகழ்ச்​சிக்கு திருத்​துறைப்​பூண்டி எம்எல்ஏ க.மாரி​முத்து, மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி ஆகியோர் தலைமை வகித்​தனர்.

துணைச் செயலா​ளர்கள் நா.பெரியசாமி, மூ.வீர​பாண்​டியன், தேசிய நிர்​வாகக் குழு உறுப்​பினர் டி.எம்​.மூர்த்தி, மாநிலப் பொருளாளர் எம்.ஆறு​முகம், மாநில செயற்​குழு உறுப்​பினர் வை.சிவபுண்​ணியம் உள்ளிட்​டோர் பங்கேற்​றனர்.

கூட்​டத்​துக்​குப் பின் மாநிலச் செயலாளர் இரா.​முத்​தரசன் செய்தி​யாளர்​களிடம் கூறியது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின் நூற்​றாண்டு விழா வரும் 26-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. அப்போது தமிழகம் முழு​வதும் அனைத்​துப் பகுதி​களி​லும் கட்சிக் கொடியேற்று​வது, ஒரு கோடி பனை விதைகள் நடுவது போன்ற பணிகள் மேற்​கொள்​ளப்​படும்.

ஜன.26-ல் தருமபுரியில் பேரணி: அனைவருக்​கும் இலவசக் கல்வி, வேலை வழங்கக் கோரி வரும் ஜனவரி 26-ம் தேதி தருமபுரி​யில் ஒரு லட்சம் பேர் பங்கேற்​கும் பேரணி, பொதுக்​கூட்டம் நடைபெறும்.

தமிழகத்​தில் பல்வேறு பிரச்​சினை​களுக்காக ஆர்ப்​பாட்​டம், உண்ணா​விரதம் போன்ற போராட்​டங்களை ஜனநாயக முறைப்படி நடத்து​வதற்கு போலீ​ஸார் அனுமதி மறுக்​கின்​றனர். அவர்​களிடம் அனுமதி பெறுவது பெரும் பிரச்​சினையாக உள்ளது. எனவே, இந்த விஷயத்​தில் தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்​டும். கும்​பகோணத்தை தலைநகர​மாகக் கொண்டு புதிய மாவட்​டத்தை, தமிழர் திருநாளான வரும் பொங்கல் பண்டிகையன்று முதல்வர் அறிவிக்க வேண்​டும். அறிவிப்​பார் என நம்பு​கிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின் நூற்​றாண்டு விழாவையொட்டி, கட்சியை மேலும் பலப்​படுத்தி, பலம் பொருந்திய கட்​சி​யாக, நிராகரிக்​கப்பட ​முடியாத சக்​தியாக உரு​வாக்க ​முடிவு செய்​துள்ளோம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்