சென்னை: பொதுமக்கள் விரும்பும் வகையில், ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட புதிய வகையான கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆவின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 31 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான பால் உபப்பொருட்கள் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களிள் தேவையை அறிந்து ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பால் மற்றும் பால் உபப்பொருட்களின் தேவை மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளதால், விற்பனை நிலையங்களை அதிகரிக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலாப் பகுதிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது ஆவின் நிறுவனம் பல்வேறு புதிய பால் மற்றும் பால் உபப்பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட புதிய வகை கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் காஞ்சிபுரம்-திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஒன்றியங்களில் 18.12.2024 முதல் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago