நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய வீடுகள்; உயிரிழப்பை ஏற்படுத்தியும் இடிக்க அனுமதிக்காத மக்கள் - கணக்கெடுப்பு தொடங்கியது

By ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழ்​நாடு நகர்ப்புற வாழ்விட மேம்​பாட்டு வாரியம் சார்​பில் சென்னை பட்டினப்​பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965 முதல் 1977 காலகட்​டத்​தில் 6.20 ஹெக்​டேர் பரப்​பள​வில் 1356 அடுக்​கு​மாடி குடி​யிருப்புகள் கட்டப்​பட்டன. அங்கு தரை மற்றும் முதல் தளம், தரை மற்றும் 3 தளம், தரை மற்றும் 4 தளம் என 3 வகையாக குடி​யிருப்புகள் கட்டப்​பட்​டுள்ளன.

இந்த கட்டிடங்கள் கட்டப்​பட்டு 60 ஆண்டுகள் ஆகும் நிலை​யில் தற்போது சிதலமடைந்த நிலையில் உள்ளன. சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் குழு அந்த கட்டிடங்​களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, 10 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ தகுதி​யற்றது என சான்றளித்து​ விட்டன.

இக்கட்​டிடங்களை அகற்றி​விட்டு மறுகட்டு​மானம் செய்​ய​வும் அக்குழு அரசுக்கு பரிந்​துரைத்​துள்ளது. இப்பகு​தி​யில் குடும்​பங்கள் பெருகி வரும் நிலை​யில் ஏராளமான ஆக்கிரமிப்பு வீடு​களும் அங்கு கட்டப்​பட்​டுள்ளன. இதனால் இப்பகு​தி​யில் மறுகட்டு​மானம் செய்ய அதிகாரிகள் உள்ளே நுழைந்​தாலே, அதற்கு பொது​மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரி​வித்து வந்துள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்​களில் பொது​மக்கள் தங்கள் குடி​யிருப்பகளை காலி செய்ய வாரி​யத்​தால் அறிவிப்​பாணைகள் வழங்​கப்​பட்​டது. ஆனால் பொது​மக்கள் வீடுகளை விட்டு வெளி​யேற​வில்லை.

அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு செப்​டம்​பரில் மயிலாப்​பூர் தொகுதி எம்எல்ஏ தலைமை​யிலும், கடந்த செப்​டம்​பரில் தென் சென்னை எம்பி தலைமை​யிலும், செப்​.23, நவ,6, நவ.11 ஆகிய தேதி​களில் வாரிய கண்காணிப்பு பொறி​யாளர் தலைமை​யிலும் பொது​மக்கள் மற்றும் மீனவ கிராம சபையினருட​னும் பேச்சு​வார்த்​தைகள் தொடர்ச்​சியாக நடைபெற்ற நிலை​யில் சுமுக தீர்வு எட்டப்​பட​வில்லை. +

கணக்கெடுப்பு பணியின்போது பதற்றம் ஏற்பட்டதால் பாதுகாப்புக்காக 200-க்கும்
மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

பொது​மக்கள் எதிர்ப்பு: இந்நிலை​யில் கடந்த டிச.4-ம் தேதி இரவு 134-வது பிளாக் 3-ம் தளத்​தில் ஜன்னலின் சன்ஷேட் இடிந்து விழுந்​த​தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்​தார். அதனைத் தொடர்ந்து நேற்று நகர்ப்புற வாழ்விட மேம்​பாட்டு வாரிய அதிகாரிகள் பலத்த போலீஸ் பாது​காப்புடன் கள ஆய்வு மேற்​கொள்ள சென்​றனர். அதற்கு அப்பகுதி ​மக்கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். அதனால் அப்பகுதி​யில் பெரும் பரபரப்பு ஏற்பட்​டது.

பின்னர் போலீஸ் பாது​காப்பு​டன், பொது​மக்கள் விரும்​பும் பகுதி​களில் வீடு வீடாக சென்று, மயிலாப்​பூர் தொகுதி எம்எல்ஏ மயிலை வேலு முன்னிலை​யில் பயனாளி​களிட​மிருந்து பெயர், அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க தொடங்​கினர். இது தொடர்பாக நகர்ப்புற வாழ்விட மேம்​பாட்டு வாரிய அதிகாரி​களிடம் கேட்​ட​போது, “இப்​பகு​தி​யில் ஆய்வு செய்​தால் தான் வாரிய நிலத்​தின் எல்லை தெரி​யும். எத்தனை குடும்​பங்கள் உள்ளன என்பது தெரி​யும்.

அதன் பிறகு தான் இந்த இடத்​தில் எத்தனை வீடுகள் கட்ட முடி​யும், அதற்கு எவ்வளவு நிதி தேவை என்பதை முடிவு செய்து, அரசுக்கு நிதி கேட்டு கருத்​துரு அனுப்ப முடி​யும். தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்ட பகுதி​யில் மட்டும் ஆய்வுக்கு மக்கள் அனும​திக்க​வில்லை.

மற்ற இடங்​களில் மக்​கள், கட்டிடத்​தின் நிலை, பாது​காப்​பின்​மையை உணர்ந்து ஆய்​வுக்கு ஒத்​துழைப்பு அளித்து வரு​கின்​றனர். இந்த ​திட்​டப்​பகு​தி​யில் இருந்து இதுவரை ரூ.10 கோடிக்​கும் மேல் பராமரிப்பு கட்​ட​ணம் செலுத்​தப்​பட​வில்லை என அதிகாரி​கள் தெரி​வித்​தனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்