கோட்டை அமீர் பதக்​க பரிசு தொகை ரூ.5 லட்சமாக உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்​கத்​துக்கான பரிசுத்​தொகை ரூ.5 லட்சமாக உயர்த்​தப்​பட்​டுள்ளதாக தமிழக அரசு அறிவித்​துள்ளது.

மத நல்லிணக்​கத்​துக்காக பாடு​பட்டு சிறப்பாக சேவை செய்​து​வரும் நபர் ஒருவருக்கு, ஆண்டு​தோறும் குடியரசு தின விழா​வில், ‘கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்​கம்’ விருது முதல்​வ​ரால் கடந்த 2001-ம் ஆண்டு முதல் வழங்​கப்​பட்டு வருகிறது. அதில் ரூ.9 ஆயிரம் மதிப்புடைய தங்க பதக்​கத்​துடன் ரூ.25 ஆயிரம் பரிசுத்​தொகை​யும், சான்​றிதழும் வழங்​கப்​படும்.

இந்நிலை​யில் 2025-ம் ஆண்டு முதல் நடைபெறும் குடியரசு தின விழா​வில் இருந்து வழங்​கப்​படும் ‘கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்​கத்​துக்கான’ பரிசுத்​தொகை ரூ.25 ஆயிரத்​தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டா​லின் உத்தர​விட்​டுள்​ளார். அதன்படி கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்​கத்​துக்கான பரிசுத்​தொகை ரூ.5 லட்​சமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்