ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களில் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலைய துறை முயற்சி

By செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: ​மாமல்​லபுரத்தை அடுத்த சூலேரிக்​காடு, பட்டிபுலம் பகுதி​களில் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​தமான நிலத்​தில் உள்ள ஆக்கிரமிப்பு​களை, நீதி​மன்ற உத்தர​வின் பேரில் அகற்ற முயன்ற அறநிலையத் துறை அதிகாரி​களை, அப்பகு​திவாசிகள் தடுத்து நிறுத்​தி​ய​தால் பரபரப்பு ஏற்பட்​டது.

செங்​கல்​பட்டு மாவட்​டம், மாமல்​லபுரம் பகுதி​யில் இருந்து கோவளம் பகுதிவரை ஈசிஆர் சாலை​யையொட்டி ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​தமாக 1,050 ஏக்கர் நிலங்கள் பல்வேறு பகுதி​களில் அமைந்​துள்ளன. இந்நிலங்கள் பல இடங்​களில் ஆக்கிரமிக்​கப்​பட்​டுள்ளன. இதனால், அறக்​கட்​டளைக்கு சொந்​தமான நிலங்​களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தைமீட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்​டும் என கடந்த ஆண்டு சென்னை உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டது.

இதன்​பேரில், செங்​கல்​பட்டு மாவட்ட அறநிலையத் துறை சார்​பில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கபல்வேறு நடவடிக்கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்றன. இதில்,மாமல்​லபுரத்தை அடுத்த சூலேரிக்​காடு பகுதி​யில் உள்ள 39 ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற கடந்த சில மாதங்​களுக்கு முன்பு ஆளவந்​தார் அறக்​கட்டளை சார்​பில் நடவடிக்கை மேற்​கொள்​ளபட்​டது.

அப்போது, அப்பகு​திவாசிகள் ஒன்று திரண்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தடுத்து நிறுத்​தினர். இதையடுத்து, அதிகாரி​களுடன் நடந்த பேச்சு​வார்த்​தை​யில், நீதி​மன்​றத்தை அணுகி முறையாக உத்தரவு பெறு​வதாக தெரி​வித்​தனர்.

இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள், தற்காலிகமாக நிறுத்தி வைக்​கப்​பட்​டன. இந்நிலை​யில், ஆக்கிரமிப்​பாளர்​களில் 37 பேர் நீதிமன்றம் அணுகிய​தாக​வும், 2 பேர் அணுகாமல் இருப்​ப​தாக​வும் தெரிந்​தது. இதையடுத்து, நீதி​மன்​றத்தை அணுகாமல் இருந்த 2 நபர்​களின் வீட்​டை​யும் பூட்டி சீல் வைப்​ப​தற்​காக, அறநிலையத் துறை உதவி ஆணையர் ராஜலட்​சுமி தலைமையிலான பணியாளர்கள் மற்றும் போலீ​ஸார் அப்பகு​திக்கு வந்தனர். ஆனால், அப்பகுதி வாசிகள் பணிகளை தடுத்த நிறுத்​தி​ய​தால் பரபரப்பு ஏற்பட்​டது.

பின்னர், 2 வீட்​டாரும் ஒரு வார காலம் அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்​தனர். இதையடுத்து, அறநிலையத் துறை அதிகாரிகள் அனைவரும் பட்டிபுலம் பகுதிக்கு சென்று 1.3 ஏக்கர் நிலத்​திலிருந்த 41 ஆக்கிரமிப்பு குடி​யிருப்புகளை பூட்டி சீல் வைக்​கும் பணிகளில் ஈடுபட்​டனர். ஆனால், அதிகாரிகளை உள்ளே விடாமல் மீனவர்கள் தடுத்துநிறுத்​தினர். பின்னர், நடைபெற்ற பேச்சு​வார்​தை​யில் மேல்​முறை​யீட்டுக்காக நீ​தி​மன்​றத்தை அணுக உள்ள​தால், கால அவ​காசம் வழங்க கோரினர். அதிகாரி​களும் அதை ஏற்று ​திரும்பி சென்​றனர். இத​னால், அப்​பகு​தி​யில் பரபரப்பு ஏற்​பட்​டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்