அயனாவரம் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களை என்கவுன்ட்டர் செய்​தால் கூட மக்கள் எதிர்க்க​மாட்​டார்கள்: நடிகை கஸ்தூரி

By செய்திப்பிரிவு

சென்னை: அயனாவரம் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களை என்கவுண்ட்டர் செய்தால் கூட மக்கள் எதிர்க்கமாட்டார்கள் என நடிகை கஸ்தூரி ஆவேசமாக தெரிவித்தார்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கர்களுக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று எழும்பூர் காவல் நிலையம் வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதில் தளர்வு அளித்த நீதிமன்றத்துக்கும், காவல்துறைக்கும் நன்றி. ஆதவ் அர்ஜூனாவை வேண்டாம் என எந்த கட்சியும் சொல்லமாட்டார்கள். அனைத்து கட்சிகளுக்கும் மார்ட்டின் குடும்பம் நிதி வழங்கியிருக்கிறது. ஆதவ் அர்ஜூனா அரசியல் ரீதியாக பேசுவதால் சில மோதல்கள் ஏற்படலாம். அதேநேரம் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

அயனாவரத்தில் ஏற்கெனவே நடந்த சம்பவத்தையை நான் இன்னும் மறக்கவில்லை. மக்களும் மறக்கவில்லை. அதற்குள் அதேபோல், மற்றொரு சம்பவம் அயனாவரம் மாணவிக்கு நேர்ந்துள்ளது. மனநலம் குன்றிய குழந்தையை கடவுளின் குழந்தையாக பார்க்க வேண்டும். அந்த வலி எனக்கு தெரியும். தவறு செய்யாதவர்களை தனிப்படை வைத்து தேடும் போலீஸார், இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குற்றவாளிகள் வெளியே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் சட்டஒழுங்கு எந்த அளவில் இருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. தமிழகத்தில் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. சிறப்பு குழந்தைக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றால், எங்கே போய் சொல்வது? இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை என்கவுண்ட்டர் செய்தால் கூட மக்களும் அதை எதிர்க்கமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்