திருவண்ணாமலை தீபத் திருவிழா: 4 நாள்களுக்கு 10,109 சிறப்பு பேருந்து

By செய்திப்பிரிவு

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு டிச.12 முதல்15-ம் தேதி வரை 4 நாள்களுக்கு 10,109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித் துள்ளது.

அதன்விவரம் வருமாறு: கார்த்திகை தீப திருநாள் (டிச.13), பவுர்ணமி (டிச.14)யை முன்னிட்டு, டிச.12 முதல் டிச.15-ம் தேதி வரை சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து (குறிப்பாக சேலம், வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கும்பகோணம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற இடங்களில் இருந்து) திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு டிச.12 முதல் டிச.15 வரை 1,982 பேருந்துகளும், பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு டிச.12-ம் தேதி முதல் டிச.15-ம் தேதி வரை 8,1127 பேருந்துகளும் என மொத்தம் 10,109 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களின் மூலம் இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தீபத் திருவிழாவை முன்னிட்டு 14 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். 700 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மருத்துவம், குடிநீர், கழிப்பறை வசதிகளுக்கும் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்