சென்னை: மறதி நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற மறதி நோய் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நிபுணர்கள் வலியுறுத்தினர்.
தி டிமென்ஷியா கேர் பவுண்டேஷன் மற்றும் சிபிபி லேர்னிங் லேப் இணைந்து டிமென்ஷியாவால் (மறதி நோய்) பாதிக்கப்பட்டவர்கள் குறித்த திரைப்படங்களும், அவர்களின் நிஜ வாழ்க்கை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வும் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலை நடிகர் பி.சி.ராமகிருஷ்ணா ஒருங்கிணைத்தார்.
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, “எனது வீ்ட்டுக்கு கீழே ஓய்வுபெற்ற பொறியாளருக்கு மறதிநோய் இருந்தது. அவரை அவரது மனைவி கனிவுடன் கவனித்து வந்தார். அவர்களது வாழ்க்கையே 'ஓகே கண்மணி' திரைப்படம் உருவாக காரணமாக அமைந்தது. அதுபோல எனது வீட்டுக்கு அருகில் சிறப்பு குழந்தையொன்று இருந்தது. அந்த குழந்தையை பற்றி தெரிந்த பிறகுதான் 'அஞ்சலி' திரைப்படம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மறதி நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
இதேபோல் 'ஓகே கண்மணி' படத்தில் மறதி நோயால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்த நாட்டியக் கலைஞர் லீலா சாம்சனும், இந்த நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். மனநல நிபுணர் பூர்ணிமா ராஜன் மிஸ்ரா கூறும்போது, “மறதி நோயின் அறிகுறி தெரிவதற்கு முன்பே அந்த நோய் பாதித்துவிடுகிறது. முதியோர் மீண்டும், மீண்டும் கேள்வி கேட்பது, மறதி போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகப் பார்க்கப்படுகிறது" என்றார்.
» ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் முக்கிய சோதனைகளை விரைவில் தொடங்க திட்டம்
» திருவாவடுதுறை ஆதீனம் 23-வது குருமகா சந்நிதானத்துக்கு குருபூஜை விழா
மனநல மருத்துவர் எஸ்.ஜனனி பேசும்போது, “மறதி நோய் என்பது ஒரு குடை போன்றது. அதன் கீழே அல்சைமர், டிமென்ஷியா, பார்க்கின்ஸ் உள்ளிட்ட பல நோய்கள் உள்ளன. உடற்பயிற்சி மூலம் உடலைப் பலமாக வைத்திருப்பதைப்போல மூளைக்கும் அவ்வப்போது வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்போது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே மறதி நோய் வருகிறது.
அவர்கள் அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கே போராடுகின்றனர். அவர்களுக்கு குடும்பத்தினர் உள்ளிட்டோர் முழு ஆதரவு அளிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார். காயத்ரி ஜெயராம் பேசும்போது, “மறதி நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் அவர்களைக் கவனிப்பவர்களுக்கும் பயிற்சி அவசியம். இல்லாவிட்டால், அவர்கள் பொறுமை இழந்து கோபத்தில் நோயாளியை அடித்துவிடக்கூடும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக மறதி நோய் பற்றி எடுக்கப்பட்ட ஓகே கண்மணி உள்ளிட்ட தமிழ் மற்றும் ஆங்கில திரைப்படங்களின் சில காட்சிகள் திரையிடப்பட்டன. நிறைவில், இந்த விழாவையொட்டி நடத்தப்பட்ட புகைப்பட போட்டிகளில் வெற்றிபெற்ற முதல் 3 மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மனநல மருத்துவர்கள், நரம்பியல் சிகிச்சை மருத்துவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago