சென்னை: தமிழகத்தில் சீசன் முடிந்த பிறகும் காற்றாலைகளில் இருந்து கூடுதல் மின்சாரம் கிடைப்பதால், அனல் மின் உற்பத்தியை மின்வாரியம் குறைத்துள்ளது.
தமிழகத்தில் 9,150 மெகாவாட் திறனில் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான காற்றாலை மின்நிலையங்கள் உள்ளன. அந்த நிறுவனங்கள் இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்வதுடன், சொந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி வருகின்றன.
கடந்த மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன். இந்த காலத்தில் காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக 8 கோடி முதல் 10 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கும். கடந்த அக்டோபர் முதல் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலைகளில் இருந்து தினசரி 1 கோடி யூனிட் மின்சாரம்கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக, கடந்த சில நாட்களாக காற்றாலைகளில் இருந்து அதிக அளவில் மின்சாரம் கிடைக்கிறது. அதன்படி, கடந்த 30-ம் தேதி 3 கோடி யூனிட், டிசம்பர் 1-ம் தேதி 5.56 கோடி யூனிட், 2-ம் தேதி 5.88 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்துள்ளது. இதனால், காற்றாலை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
» ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் முக்கிய சோதனைகளை விரைவில் தொடங்க திட்டம்
» மருந்தக கட்டுப்பாடு: ஏழைகளுக்கான வாய்ப்பை மறுக்கக் கூடாது!
மேலும், இந்த மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்துவதற்காக அனல் மின் உற்பத்தி மற்றும் மின்கொள்முதலை மின்வாரியம் குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago