ஃபெஞ்சல் புயல் பாதிப்பில் பாடநூல்கள், சீருடைகள் இழப்பு: மீண்டும் வழங்கும் பணிகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்​டங்கள் பெரியள​வில் பாதிக்​கப்​பட்​டுள்ளன. மழை, வெள்ள பாதிப்​பில் பள்ளி மாணவர்​களின் பாடநூல்​கள், நோட்டுப்புத்​தகங்​கள், பைகள், சான்​றிதழ்கள் ஆகியவை சேதம் அடைந்தன. அவ்வாறு பாதிக்​கப்​பட்ட மாணவர்​களின் விவரங்களை சேகரிக்க பள்ளி கல்வித்துறை உத்தர​விட்​டிருந்​தது.

அதன்படி முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரி​கள், ஆசிரியர்கள் களத்​தில் ஆய்வு செய்து அதுதொடர்பான புள்ளி விவரங்களை பள்ளி​ கல்​வித்துறை வசம் ஒப்படைத்​தனர்.
அதில் கடலூர் மாவட்​டத்​தில் மட்டும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் தமிழ் வழி பாடநூல்களை 3,447 மாணவர்​களும், ஆங்கில வழி பாடநூல்களை 1,865 மாணவர்​களும் என மொத்தம் 5,312 பேர் இழந்​துள்ளனர்.

இதுதவிர 2,900 மாணவர்கள் பள்ளி சீருடைகளை​யும் 2,567 பேர் புத்தக பைகளை​யும் 3,219 பேர் நோட்டு புத்​தகங்​களை​யும் மழை வெள்​ளத்​தில் இழந்​துள்ளனர். அவர்களுக்​கு புதிய பொருட்கள் வழங்​கும் பணிகள் தொடங்​கப்​பட்​டுள்ளன. இதே போல், விழுப்புரம் உட்பட மழை பாதிப்​பில் புத்​தகங்​கள், பைகள் மற்றும் சீருடைகளை இழந்த மாணவர்​களின் விவரங்கள் சேகரிக்​கப்​பட்டு வருவ​தாக​வும், அவர்​களுக்​கும் ​விரை​வில் வழங்​கப்பட உள்ள​தாக​வும் துறை அதிகாரி​கள் தெரி​வித்​தனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்