சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 2 நாள் கூட்டம் இன்று தொடங்கு கிறது. இதில், டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்வது தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருகிறார்.
தமிழக சட்டப்பேரவையில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது. பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்தால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்த வேண்டும். அந்த வகையில், இம்மாத இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், சட்டப்பேரவை டிசம்பர் 9-ம் தேதி கூடும் என்று பேரவை தலைவர் மு.அப்பாவு கடந்த நவம்பர் 25-ம் தேதி அறிவித்தார். கடந்த 2-ம் தேதி நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தை டிசம்பர் 9, 10-ம் தேதிகள் (இன்றும், நாளையும்) என 2 நாட்கள் நடத்துவது என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. முதலில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பை பேரவை தலைவர் அப்பாவு வாசிப்பார். அதன்பின், முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
தொடர்ந்து, கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் மாநில அரசின் அனுமதி பெறாமல் மத்திய அரசால் டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருகிறார். இந்த தீர்மானத்தின்மீது சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் பேசிய பிறகு, தீர்மானம் நிறைவேற்றப்படும்.
நாளை (டிச.10) கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இது தவிர பல்வேறு சட்ட முன்வடிவுகளும் நிறைவேற்றப்பட உள்ளன.
சென்னை பல்லாவரத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம். மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பும் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago