சென்னை: படைவீரர் கொடி நாள் வசூலில் சென்னை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மனிவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள பாம்குரோவ் சைனிக் நிறுவனத்தில் படைவீரர் கொடிநாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
படைவீரர் கொடி நாள் நிதி வசூலுக்கு சென்னை மாவட்டம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 139.44 சதவீதம் நிதி வசூல் புரிந்து மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது என அப்போது தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் தொகுப்பு நிதி மற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியில் இருந்து பல்வேறு நிதியுதவிகளாக 25 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்காக ரூ.4 லட்சத்து 69,187 வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago