சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் கடந்தாண்டு முடிவடைந்த நிலையில், பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை. விதிகள்படி புதிய ஆளுநர் பதவியேற்கும் வரை, ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடர்வார்.
இந்நிலையில், ஆளுநர் ரவி, நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் ஆளுநரின் செயலர், பாதுகாப்பு அலுவலர்கள் சென்றுள்ளனர். ஆளுநர் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதையும் ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடவில்லை. அவர் தனது டெல்லி பயணத்தை முடித்துவிட்டு இன்று இரவு மீண்டும் சென்னை திரும்புகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago