கலைஞர் கைவினை திட்டத்தை பயன்படுத்தி தொழில் முனைவோராகலாம்: அமைச்சர் அன்பரசன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் தா.மோ.அன்​பரசன் நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: “கலைஞர் கைவினைத்​திட்​டம்" என்ற பெயரில் தமிழகத்​துக்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்​கப்​பட்​டுள்​ளது.

இத்திட்​டம், குடும்பத் தொழில் அடிப்​படை​யில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்​களில் ஈடுபட்​டுள்ள அனைத்​துத் தரப்பு மக்களும் பயனடை​யும் வகையில் உருவாக்கப்​பட்​டுள்​ளது.

இத்திட்​டத்​தின் மூலம் புதிய தொழிலைத் தொடங்​க​வும், செய்​யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்​ய​வும் கடன் உதவி​களும், திறன்​மேம்​பாட்டு மற்றும் தொழில் முனை​வோர் மேம்​பாட்டுப் பயிற்சி​களும் வழங்​கப்​படும். கலைஞர் கைவினைத் திட்​டத்​தில் அதிகபட்​சமாக ரூ.50 ஆயிரம் வரை 25 சதவீதம் மானி​யத்​துடன் கூடிய ரூ.3 லட்சம் கடனுதவி​யும், 5 சதவீதம் வரை வட்டி மானிய​மும் வழங்​கு​வதுடன், தொழில் வளர்ச்​சிக்​குத் தேவையான அனைத்து உதவி​களும் வழங்​கப்​படும். இத்திட்​டத்​தின்​கீழ் பயன்பெற குறைந்​த​பட்ச வயது 35 ஆக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இத்திட்​டத்​தின்​கீழ் மர வேலைப்​பாடு​கள், படகு தயாரித்​தல், உலோக வேலைப்​பாடு​கள், பூட்டு தயாரித்​தல், சிற்ப வேலைப்​பாடு​கள், கற்சிலை வடித்​தல், கண்ணாடி வேலைப்​பாடு​கள், மண்பாண்​டங்​கள், சுடுமண் வேலைகள், கட்டிட வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்​பான்கள் செய்​தல், பொம்​மைகள் தயாரித்​தல், மலர் வேலைப்​பாடு​கள், மீன் வலை தயாரித்​தல், தையல் வேலை, நகைசெய்​தல், சிகையலங்​காரம் மற்றும் அழகுக்​கலை, துணி வெளுத்தல் தேய்த்​தல், இசைக்​கருவிகள் தயாரித்​தல், துணி நெய்தல் மற்றும் துணி​களில் கலை வேலைப்​பாடுகள் செய்​தல், பாரம்​பரிய முறை​யில் ஜவுளி அச்சிடு​தல், பாசிமணி வேலைப்​பாடு​கள், மூங்​கில், சணல், பனை ஓலை, பிரம்பு வேலைப்​பாடு​கள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்​பாடுகள், சுதை வேலைப்​பாடு​கள், பழங்​குடி​யினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்​களுக்​குக் கடன் வழங்​கப்​படும். ஆண்டுக்​கு குறைந்​த​பட்சம் 10,000 கைவினைஞர்கள் பயன்​பெறும் வகையில் திட்டம் செயல்​படுத்​தப்​படும்.

இத்திட்​டத்​தில் பயன்பெற ‘www.msmeonline.tn.gov.in’ என்ற இணையதளத்​தில் விண்​ணப்​பிக்க வேண்​டும். தகுதியான விண்​ணப்​பங்களை மாவட்டத் தொழில் மையத்​தின் பொது மேலா​ளர்கள் தலைமை​யில் உள்ள குழு சரிபார்த்து, வங்​கி​களுக்​குப் பரிந்​துரைக்​கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்