சென்னை: இளைஞர்கள் தூதுவர்களாக இருந்து இந்தி மொழியின் அழகு, சிறப்பை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த இந்தி பிரச்சார சபா பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தக் ஷின பாரத் இந்தி பிரச்சார சபாவின் 83-வது பட்ட மளிப்பு விழா நேற்று நடைபெற்றது. சபாவின் தலைவர் வி.முரளிதரன் தலைமை தாங்கினார். அறங்காவலர் குழு தலைவர் எம்.எஸ்.முரளிதரன், தேசியக் கொடியை ஏற்றிவைத்து, விழாவை தொடங்கி வைத்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் பிரவீன், விஷாரத் தேர்வுகளில் சுமார் 8 ஆயிரம் பேர் பட்டம் பெற்றனர்.
மத்திய துறைமுகம், கப்பல், நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ஒவ்வொரு படிப்பிலும் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு தங்கப் பதக்கங்கள், பட்டங்களை வழங்கினார். அவர் பேசியதாவது:
தேசிய ஒற்றுமையை நிலைநாட்டுவதில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த மொழிகள்தான் நம் அனைவரையும் ஒருங்கிணைக்கின்றன.
» வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.10 முதல் கனமழைக்கு வாய்ப்பு
» இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
இந்தி நமது கலாச்சாரம், தேச பக்திக்கு அடிப்படையாக திகழ்கிறது. மனிதநேயத்தை ஊக்குவிக்கிறது. மற்ற மொழிகளை எளிதாக கற்க உதவுகிறது. இதுதான் இந்தியின் மாபெரும் சக்தி. இந்தியாவில் எந்த மாநிலத்துக்கு சென்றாலும் நம்மை ஒன்று சேர்க்கும் மொழியாக இந்தி இருக்க வேண்டும். இளைஞர்கள் இதன் தூதுவர்களாக இருந்து இந்தி மொழியின் அழகு, சிறப்பை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago