தேசிய வங்கிக் கிளை முன்பு அமர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம்

By கி.தனபாலன்


ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் தேசிய வங்கிக் கிளை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை காலை மீன்பிடிக்கச் சென்று வியாழக்கிழமை அதிகாலை இலங்கை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த ராபின்சன், ராஜபிரபு, அரவிந்த் பாண்டி, முனீஸ்வரன் உள்ளிட்ட 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 14 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் அமைப்புகள் இணைந்து தங்கச்சிமடம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை முன்பு அமர்ந்து இன்று (டிச.7) போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் கை குழந்தைகளுடனும், சிலர் சாலையில் படுத்தும் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர் சங்க தலைவர் காரல் மார்க்ஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றனர். பின்னர் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் மீனவர்களை விடுதலை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மீனவர்கள் 14 பேர் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்