பதிவு துறையில் ஒரே நாளில் ரூ.238.15 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வருவாய் ஈட்டுவதில் முக்கிய துறையாக விளங்குவது பதிவுத் துறை. இந்நிலையில், இத்துறையின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

வசூலில் புதிய மைல்​கல்: அந்த வகையில், கடந்த 2023 நவம்பர் மாதத்தைவிட கூடுதலாக ரூ.301.87 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 5-ம் தேதி கார்த்திகை மாத சுபமுகூர்த்த நாளில் ஆவணங்கள் அதிக அளவில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால் சிறப்பு நிகழ்வாக, மக்கள் பயன் பெறும் வகையில் முன்பதிவு டோக்கன் எண்ணிக்கை 100-ல் இருந்து 150 ஆக உயர்த்தப்பட்டது.

இந்த டோக்கன்களை பயன்படுத்தி, கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருநாள் வருவாய் வசூலில் புதிய மைல்கல்லை பதிவுத் துறை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்