அதானியை முதல்வர் சந்திக்கவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

By செய்திப்பிரிவு

சென்னை: மின்​துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வெளி​யிட்ட அறிக்கை​: தொழில​திபர் அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தது போலவும், அதிக விலை கொடுத்து அதானி​யிடம் இருந்து சூரிய ஒளி மின்​சாரம் பெற ஒப்பந்தம் போட்​டிருப்பது போலவும் தொடர்ந்து எதிர்க்​கட்​சிகளும், ஊடகங்​களும் கற்பனையான தகவலை கட்டுக்​கதைகள் போல் வெளி​யிட்டு வருகின்றன.

தமிழக முதல்வர் அதானியைச் சந்திக்​க​வும் இல்லை. அதானி நிறு​வனத்​துடன் நேரடியாக சூரிய ஒளி மின்​சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை. பிற மாநிலங்​களைச் சேர்ந்த மின்சார வாரி​யங்​களைப் போல தமிழ்​நாடு மின்​வாரிய​மும் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்​பரேஷன் ஆஃப் இந்தியா நிறு​வனத்​துடன் மட்டுமே மின்​சாரம் கொள்​முதல் செய்து வருகிறது.

மத்திய அரசால் கட்டாய​மாக்​கப்​பட்​டுள்ள மரபுசாரா கொள்​முதல் இலக்​குகளை அடைவதற்​கு, தமிழ்​நாடு மின்சார ஒழுங்​கு​முறை ஆணையத்​தின் ஒப்புதல் பெற்று செய்​யப்​பட்ட ஒப்பந்​தங்​களாகும். இதில், எவ்வித முறை​கேடும், விதி​முறை மீறல்​களும் இல்லை.

ஆகவே, இது சம்பந்​தமாக 2024-ம் ஆண்டு அதானி நிறு​வனத்​தின் பிரதி​நி​தியை முதல்வர் சந்தித்​த​தாக கூறுவது ​முற்றி​லும் தவறான தகவல். இதுதொடர்​பாக, பொய் தகவல்​களைத் தொடர்ந்து பரப்பு​வார்​களே​யானால், அவர்​கள் மீது கடும் சட்​டப்​பூர்வ நட​வடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு செந்​தில் பாலாஜி தெரி​வித்​துள்​ளார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்