‘இந்தியன் வங்கி அலுவலர் தேர்வில் கட் ஆஃப் மார்க் மறைப்பு ஏன்?’ - நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் கேள்வி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: இந்தியன் வங்கி அலுவலர் தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண் மறைக்கப்படுவதன் நோக்கம் என்ன என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை தொகுதி எம்பியான சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பொதுத் துறை நிறுவனமான இந்தியன் வங்கியில் உள்ளூர் மட்டத்திலான அலுவலர்களுக்கான 300 பணி நியமனத்துக்கான அறிவிக்கை ஆக.31-ல் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்.9 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அக்.10-ம் தேதி ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் அடுத்த கட்டத்துக்கு 1,305 பேர் அனுமதிக்கப்பட்டு, அவர்களது பெயர் பட்டியல் நவ.27-ல் வெளியானது.

ஒவ்வொரு தேர்விலும், தேர்ச்சி பெற்றவர்கள் எவ்வளவு மதிப்பெண் எடுத்தார்கள் என்பதை வெளியிடுவது வழக்கம். தற்போது வங்கிப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் ஐபிபிஎஸ் (Indian Banking Personnel Selection) என்ற அமைப்பு ஒவ்வொரு முறையும் கட் ஆப் மதிப்பெண்களை வெளியிட்டு வருகிறது. மத்திய, மாநில அரசு ஊழியர்களைத் தேர்வு செய்யும் தேர்வாணையங்களும் முடிவுகளை வெளியிடும். தேர்வர்களின் மதிப்பெண்கள், எத்தனை மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்வாகினர் என்ற முடிவுகளும் வெளியிடப்படும்.

ஆனால், இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளில் ஒவ்வொரு பிரிவினருக்குமான குறைந்தபட்ச மதிப்பெண்கள் வெளியாகவில்லை. அதன் அறிவிக்கையில், தேர்வர்கள் ஒரு மாநிலத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மாநிலத்துக்கு விண்ணப்பிக்கும் தேர்வர், பிற மாநிலங்களில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியிழந்தவர் ஆவார். மதிப்பெண் அடிப்படையிலான தகுதிப் பட்டியல் மாநில வாரியாக மற்றும் பிரிவு வாரியாகத் தயாரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தேர்வு முடிவுகளில் மாநில வாரியான மற்றும் பிரிவு வாரியான மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது இல்லாமல் தகுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில், இதுபோன்ற பிரச்சினைகள் எழுந்தபோதெல்லாம் இட ஒதுக்கீடுகளில் தவறுகள் செய்யப்பட்டிருந்தன. இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் அந்தப் பிரிவினருக்கான இடங்களை ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நல்ல மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர், பொதுப்பிரிவில் சேர்க்கப்படாமல் இடஒதுக்கீட்டுப் பிரிவுப் பணியிடங்களில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர். இது இட ஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு எதிரானதாகும். சமூக நீதிக்காகப் போராடும் அமைப்புகள் தலையிட்டதால் அந்தப் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டன. ஆனால் தேர்வு நடைமுறையில் அதுபோன்ற பிரச்சினை மீண்டும் வந்துள்ளது. தேர்வின் அடுத்த கட்டத்துக்குத் தகுதி பெற்றவர்களின் பட்டியல் இந்தியன் வங்கியின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

தேர்வர்களின் சமூகப் பிரிவு என்ன என்பது அதில் குறிப்பிடாததால், அந்தப் பட்டியல் முழுமையானதாக இல்லை. சமூகங்களைக் குறிப்பிட்டு பட்டியல் வெளியிடப்பட வேண்டும். தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களும் தரப்படவில்லை. குறைந்தபட்சம், முதல் கட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களின் மதிப்பெண்களையாவது வெளியிட்டிருக்க வேண்டும். அடுத்த கட்டத்துக்குத் தகுதி பெற்றவர்களுக்கு, அந்தக் கட்டம் நிறைவு பெற்ற பிறகு மதிப்பெண்கள் வழங்குவது அவசியமாகும்.

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் எண்ணிக்கையும் அதிர்ச்சியூட்டுகிறது. பொதுவாக, எழுத்துத் தேர்வுக்குப் பின்னர் 1:10 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இங்கு 1,305 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இந்த விகிதாச்சாரம் கூட, மாநில வாரியாக மற்றும் சமூகப் பிரிவு வாரியாக இருக்க வேண்டும். இது தீவிரமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். தேர்வு நடைமுறையைத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். இதுபோன்ற அலுவலர் பணியிடங்களுக்கு முதல்நிலை மற்றும் பிரதான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

நல்ல, திறமையுள்ள தேர்வர்களைக் கண்டறிய அந்த நடைமுறை உதவுகிறது. இதனால், மாநில மற்றும் சமூகப் பிரிவு வாரியான கட்ஆப் மதிப்பெண்கள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் விகிதாச்சாரத்தை பரிசீலிக்க வேண்டும். தகுதிப் பட்டியலில் அவரவர் பெயர்களுக்கு எதிரில் சமூகப் பிரிவைக் குறிப்பிட வேண்டும். அனைத்துத் தேர்வர்களுக்கும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை வழங்குதல் அவசியம். ஒட்டுமொத்தத் தேர்வு முறையைப் பரிசீலிக்கத் தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்