ஒரு காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய நகரம் கும்பகோணம். மாவட்ட தலைநகருக்கான அனைத்துத் தகுதிகளும் இருப்பதால் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என இங்குள்ள அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் 26 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது செம்பனார்கோவில் மற்றும் ஒரத்தநாட்டில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும்” என கும்பகோணத்து வாக்காளர்களுக்கு நம்பிக்கையளித்தார். இதோ, அடுத்த தேர்தலும் வரப்போகிறது. இன்னும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றித் தரவில்லையே ஸ்டாலின் என கும்பகோணத்து மக்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செயலாளர் வி.சத்திய நாராயணன், “கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது எங்களின் கால் நூற்றாண்டு கால போராட்டம்.
கடந்த தேர்தலில் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நம்பி, இப்பகுதியில் உள்ள 3 தொகுதிகளில் திமுகவை வெற்றிபெற வைத்தார்கள் மக்கள். அப்படி வாக்களித்த மக்கள் எல்லாம் தற்போது, சொன்னதைச் செய்யவில்லையே என திமுக மீது வருத்தத்தில் இருக்கிறார்கள். இது, வரும் தேர்தலில் திமுகவுக்கு நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும்” என்றார்.
கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவர் கே.எஸ்.சேகர் நம்மிடம் பேசுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில், இந்தப் பிரச்சினைக்காக நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அப்போதெல்லாம் திமுக எம்பி, எம்எல்ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் அதில் பங்கேற்று எங்களின் குரலாக பேசினார்கள்.
ஆனால், அவர்கள் எல்லாம் தற்போது மக்களின் எண்ணத்தை தலைமைக்கு எடுத்துச் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்கள். வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படாவிட்டால், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக நாங்கள் போராட்டத்தில் குதிப்போம்” என்றார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக கும்பகோணம் திமுக எம்எல்ஏ-வான சாக்கோட்டை க.அன்பழகனிடம் கேட்டதற்கு, “விரைவில் தமிழக முதல்வர் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை அறிவிப்பார்” என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்.
1996 முதல் இதுவரை நடந்துள்ள 6 சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ச்சியாக திமுகவை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள் கும்பகோணம் தொகுதி மக்கள். அதற்காகவாவது அவர்களின் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்த்து திமுக அரசு கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதியமாவட்டத்தை அவர்களுக்கு பரிசளிக்கும் என எதிர்ப்பார்ப்போம்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago