புதுடெல்லி: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவராகப் பதவி வகித்தபோது, பொதுக்கூட்டம் ஒன்றில் முரசொலி அறக்கட்டளை விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி அவருக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்தவழக்கு சென்னைஎம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரி்த்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது,இதற்கிடையே, இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிஉயர் நீதிமன்றத்தில் எல்.முருகன் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எல்.முருகன் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக் காலத் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமரவில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது எல். முருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.பரமேஷ்வர், ‘மனுதாரர் பட்டியலின ஆணையத்தின் துணைத்தலைவராகப் பதவி வகித்தபோது வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டார்.
» தமிழகத்தில் 2024 ஜன. முதல் செப். வரை இணையவழியில் ரூ.1,100 கோடி மோசடி: அமைச்சர் பிடிஆர் தகவல்
அப்போது நடந்த இந்த விவகாரம் அரசியல் ரீதியிலான சொல்லாடல் மட்டுமே’ என்றார். அதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.பாரதியின் கருத்தைக் கேட்டு தெரிவிக்கும்படி அவரது தரப்பு மூத்த வழக்கறிஞரான சித்தார்த் லுத்ராவிடம் அறிவுறுத்தியிருந்தனர்.
அதன்படி இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தபோது எல்.முருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.பரமேஷ்வர், ‘இந்த விவகாரத்தி்ல் முரசொலி அறக்கட்ட ளையின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கமோ, அறக்கட்டளை நிர்வாகிகளின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கமோ எங்களுக்கு இலலை’ என்றார்.
பதிலுக்கு ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி்த்தார்த் லுத்ராவும், ‘அவர்களே எந்த உள்நோக்கமும் இல்லை எனக் கூறியபிறகு எங்களுக்கும் இந்த வழக்கைத் தொடரும் எண்ணம் இல்லை’ என்றார். அதையடுத்து முரசொலி அறக்கட்டளையின் பெருந் தன்மைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், எல்.முருகனுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago