மாணவர்களிடம் பரிசோதனை பெற்றோர் எதிர்ப்பால் பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்கள் உடல்ரீதியாக எந்தளவுக்கு திறனுடன் உள்ளனர் என்பதை அறிவதற்காக தாங்கும் திறன் (endurance testing) பரிசோதனை கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னை ஐஐடி மூலமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் மாணவர்கள் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெற்றோர் சிலர் மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்துக்கு புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி நடத்திய விசாரணையின் அடிப்படையில், பள்ளி முதல்வர் சதீஷ் குமார் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க பள்ளி நிர்வாகத்தையும், பெற்றோர்களையும் நாளை (டிசம்பர் 6) நேரில் வர தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்