புயல், மழை பாதிப்புக்கான நிவாரணம், இழப்பீட்டை உயர்த்துக: அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: புயல் மழையால் பாதிக்​கப்பட்ட கடலூர், விழுப்பு​ரம், கள்ளக்​குறிச்சி மாவட்​டங்​களைச் சேர்ந்த குடும்​பங்​களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்​டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளி​யிட்​டுள்ள அறிக்கை​:

பாமக நிறு​வனர் ராமதாஸ்: சென்னை​யில் கடந்த ஆண்டு ‘மிக்​ஜாம்’ புயலின்​போது ரூ.6,000 இழப்​பீடு வழங்​கப்​பட்ட நிலை​யில், அவர்களை விட மிக மோசமான பாதிப்பு​களுக்கு உள்ளான கடலூர், விழுப்பு​ரம், கள்ளக்​குறிச்சி மாவட்​டங்​களைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.2,000 மட்டுமே வழங்​கப்​படும் என்ற அறிவிப்பு மிகவும் அநீதி​யானது. அனைவருக்​கும் குறைந்தது ரூ.10,000, சேதமடைந்த நெற்​ப​யிர்​களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்​பீடு வழங்க வேண்​டும்.

விசிக பொதுச்​செய​லாளர் துரை.ரவிக்​கு​மார் எம்.பி.: வெள்ளம் சூழ்ந்த வீடு​களில் வசிப்​போருக்கு ரூ.5 ஆயிரமாக நிவாரணத்தை உயர்த்தி தரவேண்​டும். விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவக்கிராமங்​களைச் சேர்ந்​தவர்​களுக்​கும் இழப்​பீடு வழங்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.​முத்​தரசன்: உயிரிழந்​தவர்​களின் குடும்பத்​துக்கு ரூ.10 லட்சம் என அறிவிக்க கோரு​கிறோம். விவசாய பாதிப்​புக்கு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பாதிப்​புக்​குள்ளான அனைத்து தரப்பு மக்களின் வருங்கால விவசா​யம், தொழில் ஆகிய​வற்றைக் கவனத்​தில் கொண்டு நிவாரணத்தை உயர்த்தி முறையாக காலத்தே வழங்க வேண்டும்

முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்​வம்: எதிர்க்​கட்​சித் தலைவராக இருந்​த​போது, உயிரிழந்​தவர்​களுக்கு ரூ.25 லட்சம், நெற்​ப​யிருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்​டும் என்று வலியுறுத்​தி​யவர் முதல்வர் ஸ்டா​லின். எனவே, அவர் தற்போது அறிவித்த நிவாரணத் தொகையை நான்கு மடங்காக உயர்த்தி வழங்க வேண்​டும் இவ்வாறு அவர்கள் கூறி​யுள்​ளனர்.

பழனிசாமி அறிக்கை: அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: புயலால் பாதிக்​கப்​பட்ட பகுதி​களில் மண்டபங்​கள், முகாம்களாக மாற்​றப்​பட்டு, வீடு​களில் இருந்து அழைத்து வரப்​பட்​டுள்ள மக்கள் தங்கவைக்கப்​பட்​டுள்​ளனர். இந்நிலையில், முகூர்த்தம் போன்ற பல்வேறு காரணங்​களைக் கூறி மக்களை வலுக்​கட்​டாயமாக முகாமிலிருந்து திமுக அரசு வெளியேற்றி வருவதாக செய்திகள் வருகின்றன.

பேரிடர் காலங்​களில் மக்களுக்கான குடிநீர், உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட ஒழுங்காக நிறைவேற்ற முடியாத திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரி​வித்​துக் கொள் ​கிறேன். இயல்​புநிலை திரும்​பும் வரை மக்களுக்கான அனைத்து தேவை​களும் தடையின்றி கிடைக்க வேண்​டும். இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்