மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 32,240 கன அடியாக அதிகரிப்பு

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,240 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.82 அடி உயர்ந்தது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டு இருந்தது. ஃபெஞ்சல் புயல் காரணமாக, காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாகவும், தொப்பையாறு அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று (டிச.3) காலை முதல் அதிகரித்தது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 9,246 கன அடியாகவும், நேற்றிரவு 29,021 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (டிச.4) காலை 32,240 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1,000 கன அடி நீர், கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 111.39 அடியில் இருந்து 113.21 அடியாகவும், நீர் இருப்பு 80.40 டிஎம்சியில் இருந்து 83.05 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.82 அடி, நீர் இருப்பு 2.65 டிஎம்சி உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்