திருவள்ளூர்: பிச்சாட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம்- நகரி அருகே உருவாகும் ஆரணி ஆற்றின் குறுக்கே ஆந்திர பகுதியில் உள்ளது பிச்சாட்டூர் அணை. திருவள்ளூர் மாவட்டம்- ஊத்துக்கோட்டையிலிருந்து, சுமார் 16 கி.மீ., தொலைவில் உள்ள இந்த அணைக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
ஆகவே, அணையின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திர நீர் வளத்துறை அதிகாரிகள், பிச்சாட்டூர் அணையிலிருந்து கடந்த 1- ம் தேதி காலை முதல் உபரி நீரை திறந்து வருகின்றனர். தொடக்கத்தில் விநாடிக்கு 500 கன அடியாக திறக்கப்பட்ட உபரி நீர், அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி, அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2,200 கன அடியாக உள்ளது. இதனால், 1.85 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட பிச்சாட்டூர் அணையின் நீர் இருப்பு 1.60 டி.எம்.சி.யாக உள்ளது. ஆகவே, அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2,500 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
» மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ. 2,000 கோடி ஒதுக்க வேண்டும்: அன்புமணி
» திருவண்ணாமலை அருகே தரமற்ற பாலத்தைக் கட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
ஆகவே ஆரணி ஆற்றுக்கரையோரம் உள்ள பேரண்டூர், பேரிட்டிவாக்கம், காரணி, புதுவாயல், ஏலியம்பேடு, லட்சுமிபுரம், காட்டூர், ஆண்டார்மடம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், நீர்வள ஆதாரத் துறை, வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி துறையினர், போலீஸார், ஆரணி ஆற்றுங்கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago