கார்த்திகை மாத முகூர்த்த தினத்தில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு, டிச.5-ம் தேதி பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுபமுகூர்த்த தினங்களில், அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்று, பதிவுக்கான கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். தற்போது கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான டிச.5-ம் தேதி (நாளை) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதை ஏற்று, டிச.5-ம் தேதி ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 டோக்கன்கள், 2 சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 சாதாரண டோக்கன்கள் மற்றும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago