சென்னை: ரத்ததானம் செய்யும் ரயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், ரத்ததானம் செய்யும் ரயில்வே ஊழியர்கள் ஆண்டுக்கு 4 சிறப்பு விடுப்புகள் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில், மருத்துவமனைகள் செயல்படுகின்றன. தெற்கு ரயில்வேயில், சென்னையில் பெரம்பூர், திருச்சி, மதுரை உட்பட 6 இடங்களில் ரயில்வே மருத்துவமனைகள் இருக்கின்றன.
மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையின்போது, உடனடியாக, ரத்தம் தேவைப்படுவோருக்கு ரயில்வே ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், ரயில்வே தொழிற்சங்கங்களில் தன்னார்வலர் குழுவினர் ரத்ததானம் அளிப்பார்கள். அப்போது, அவர்கள் தங்கள் சொந்த விடுப்பில் சென்று, ரத்த தானம் செய்வார்கள். எனவே, ரத்ததானம் செய்யும் ரயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ரத்ததானம் செய்யும், ரயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளித்து ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த சிறப்பு விடுப்பு ஆண்டுக்கு 4 முறை வழங்கப்படும். ரத்ததானம் செய்ததற்கான உரிய மருத்துவ சான்று பெற்ற பிறகே, ரயில்வே நிர்வாகம் இதை சிறப்பு விடுப்பாக எடுத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டி.ஆர்.இ.யு. ரயில்வே தொழிற்சங்க முன்னாள் தலைவர் மனோகரன் கூறியதாவது: ரயில்வே ஊழியர்கள் சொந்த விடுப்பில் சென்று ரத்தம் கொடுக்கின்றனர். தற்போது, சிறப்பு விடுப்பு எடுத்துக்கொள்ள ரயில்வே வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. இதை வரவேற்கிறோம். இது சமூகப்பணி செய்யும் ரயில்வே ஊழியர்களை ஊக்குவிக்கும். மேலும், இது அவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது போல் இருக்கும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago