சேலத்தில் சாயப்பட்டறை கழிவுகள் திருமணிமுத்தாற்றில் கலப்பு: 3 பட்டறைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு

By வி.சீனிவாசன்

சேலம் திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுகளை கலந்த 3 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சேலம் நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. அவற்றின் கழிவுகள் சுத்திகரிப்பு செய்யாமல் சாக்கடை மற்றும் திருமணிமுத்தாற்றில் திருப்பி விடப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியன் தலைமையில் உதவி பொறியாளர் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) சேலம் குகை பகுதியில் உள்ள வேலு டையிங், வையாபுரி டையிங், லைன் மேடு பாலாஜிடெக்ஸ் ஆகியவற்றை திடீர் சோதனை நடத்தினர். அப்போது 3 சாயப்பட்டறை கழிவுகள் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக திருமணிமுத்தாற்றில் விடப்பட்டதைக் கண்ட அதிகாரிகள் அவற்றின் மின் இணைப்பைத் துண்டித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்