சென்னை: அரசு பதவிகளில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர்.
அரசு பதவிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையாக கணக்கிட்டு, சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் பணி நியமனம் வழங்க வெளியிடப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதையொட்டி அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு மூலம் அரசு நிதி உதவிபெறும் பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை கண்டறிந்து நிரப்ப வேண்டும்.
அரசு பதவிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் ‘சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை’ கருப்பு தினமாக அனுசரித்து, அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (டிச.3) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்ததால், பார்வை மாற்றுத் திறனாளிகள் சென்னை காமராஜர் சாலையில், லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தில் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால், போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீஸார் கைது செய்து அருகில் உள்ள சமூக நலக்கூடத்துக்கு அழைத்து சென்றனர்.
» தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது: குடியிருப்பில் சூழ்ந்த மழைநீர் வடிய தொடங்கியுள்ளது
இதுகுறித்து கைது செய்யப்பட்ட பார்வை மாற்றுத் திறனாளிகள் கூறுகையில், ”இன்றைக்கு சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம். ஆனால் எங்களது கோரிக்கைகளை கூட அரசு செவிகொடுத்து கேட்கவில்லை. மாற்றுத் திறனாளிகளை, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்துக்குள் செல்வதற்கே காவல்துறை அனுமதிக்கவில்லை. இவ்வாறு தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளை வஞ்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று மாற்றுத்திறனாளிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago