ஒப்பந்த செவிலியர் 1,200 பேருக்கு நிரந்தர பணிக்கான ஆணை: சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிண்​டி​யில் உள்ள தமிழ்​நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்​கழகத்​தில் நேற்று மாலை நடந்த நிகழ்​வில், அரசு மருத்​துவ​மனை​களில் ஒப்பந்த அடிப்​படை​யில் பணியாற்றி வந்த 1,200 செவிலியர்​களுக்கு நிரந்தர பணிக்கான ஆணை மற்றும் கரோனா காலத்​தில் பணி நீக்கம் செய்​யப்​பட்ட 963 செவிலியர்​களுக்கு ஒப்பந்த அடிப்​படையிலான பணிக்கான ஆணைகளை சுகா​தா​ரத்​துறை அமைச்சர் மா.சுப்​பிரமணியன் வழங்​கினார்.

தேசிய நலவாழ்வு குழும இயக்​குநர் அருண் தம்புராஜ், பொது சுகா​தாரம் மற்றும் நோய்த்​தடுப்பு மருந்​துத்​துறை இயக்​குநர் செல்​வ​விநாயகம், மருத்​துவம் மற்றும் ஊரக நலப்​பணிகள் இயக்​குநர் ராஜமூர்த்தி, கூடுதல் இயக்​குநர் சித்ரா உள்ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

இந்நிகழ்​வில் அமைச்சர் மா.சுப்​பிரமணியன் பேசும்​போது, “திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு இதுவரை சுகா​தா​ரத்​துறை​யில் மருத்​துவர்​கள், செவிலியர்​கள், மருந்​தாளுநர்​கள், உணவு பாது​காப்பு அலுவலர்கள் என மருத்​துவத் துறை​யில் மொத்தம் 20,440 பேருக்கு வெளிப்​படை
யான கலந்​தாய்வு நடத்​தப்​பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்​கப்​பட்​டுள்ளன” என்​றார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்