டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் சட்டப்பேரவை கூட்டம்: பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவை கூட்டம் டிசம்பர் 9, 10 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என்று பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9-ம் தேதி கூடும் என்று பேரவை தலைவர் மு.அப்பாவு கடந்த நவம்பர் 25-ம் தேதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அப்பாவு தலைமையில் நேற்று அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, அவை முன்னவர் துரைமுருகன், கொறடா ராமச்சந்திரன், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், கொறடா எஸ்.பி.வேலுமணி, ஜி.கே.மணி (பாமக) நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சிந்தனைச்செல்வன் (விசிக) பங்கேற்றனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேரவை தலைவர் கூறியதாவது:

சட்டப்பேரவை கூட்டத்தை டிசம்பர் 9. 10-ம் தேதிகளில் நடத்துவதாக அலுவல் ஆய்வு குழு கூடி முடிவெடுத்துள்ளது. முதல் நாளில், கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்.

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மாநில அரசின் அனுமதி பெறாமல் மத்திய அரசால் உரிமம் வழங்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் கொண்டு வருகிறார்.

2-ம் நாளில் விவாதம் நடைபெற்று பல மசோதாக்களும், கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையும் நிறைவேற்றப்படும். 2 நாட்களும் கேள்வி நேரம் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், முன்னாள் எம்எல்ஏக்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். ரத்தன் டாடா உள்ளிட்டோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்படும்.

"கூட்டத்தை 10 நாட்களாவது நடத்த வேண்டும் என்றோம். ஆனால், 2 நாட்கள் மட்டுமே நடத்த முடிவெடுத்தது வருத்தம் அளிக்கிறது" என்று அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்