திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கிய 5 சிறுவர்கள் உட்பட 7 பேரை மீட்கும் பணி தீவிரம் - முழு விவரம்

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கிய 5 சிறுவர்கள் உட்பட 7 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று (டிச.2) தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஃபெஞ்சல் புயலின் தாக்கம் திருவண்ணாமலையில் நேற்று (டிச.1) மிக கடுமையாக இருந்தது. மழையின் தாக்கம் தீவிரமாக இருந்ததால், மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மேலும் கற்கள், ராட்சர பாறைகள் உருண்டு வந்தது. வீடுகள் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் அடித்து செல்லப்பட்டு, மண்ணில் புதைந்தன. மேலும், திருவண்ணாமலை வ.உ.சி., 11-வது தெருவில் மலையடிவாரத்தில் உள்ள 4 வீடுகள் மண் சரிவில் சிக்கிக் கொண்டது. மேலும் வீடுகள் மீது பாறைகளும் விழுந்துள்ளது.

அப்போது வீடுகளில் இருந்த ராஜ்குமார், மீனா, கவுதம் (8), வினியா (6), மகா(12), தேவிகா (16), வினோதினி(16) ஆகியோர் மண் சரிவில் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு சென்ற திருவண்ணாமலை தீயணைப்புத் துறையினர் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். மண் சரிவு காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்ததால், மீட்பு பணி பாதிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையடிவாரத்தில் வசிக்க மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டன. அவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மகா தீப மலையில் 2-வது நாளாக இன்றும் மண் சரிவு ஏற்பட்ட பகுதி

இதற்கிடையில், மண் சரிவில் மண்ணில் புதைந்தவர்களை மீட்க, தேசிய பேரிடர் குழுவினர் 35 பேர் வரவழைக்கப்பட்டு, 2-வது நாளாக இன்று காலை மீட்பு பணி தொடங்கியது. இவர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட காவல் கமாண்டோ குழுவினர் 50 பேரும், மாநில மீட்பு படையினர் 20 பேரும், திருவண்ணாமலை ஆயுதப்படை காவலர்கள் 40 பேர் உட்பட மொத்தம் 170 பேர் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணியில் இயந்திரங்களை ஈடுபடுத்தினால், மண் தளர்வு ஏற்பட்டு, மேலும் பாறைகள் உருண்டு வரும் ஆபத்து உள்ளன. இதனால், கடப்பாரைகள் மூலம் மீட்பு பணி நடைபெறுகிறது. இன்று மாலை வரை, மண்ணில் புதைந்ததாக கூறப்படுபவர்களின் நிலை குறித்து தெரியவில்லை. மீட்பு பணியில் இடையூறு ஏற்படும் வகையில், அடிக்கடி மழையும் பெய்து வருகிறது. இதனிடையே மகா தீப மலையில் இன்றும் 2 இடங்களில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், திரு அண்ணாமலையின் அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியை ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோருடன் சென்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டார்.

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மண்ணில் புதைந்துள்ள இரு சக்கர வாகனங்கள்

அப்போது அவர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 1965-ம் ஆண்டுக்கு பிறகு, புயலின் தாக்கம் அதிகளவு இருந்ததுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள மலையடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ள வஉசி நகரில் மீட்பு பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதுவரை மண் சரிவு ஏற்பட்டதில்லை. மண் சரிவு காரணமாக 4 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மண் சரிவில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர்.

மண் சரிவில் சிக்கிக் கொண்டதாக கூறப்படும் பெண் உட்பட 4 பேர்.

அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். மலையடிவாரத்தில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்