கடந்த 2023-24-ம் ஆண்டில் தமிழகத்தின் மொத்த மின்நுகர்வு 742 கோடி யூனிட்கள் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தின் மொத்த மின்​நுகர்வு கடந்த 2023-24-ம் ஆண்டில் 742 கோடி யூனிட் அதிகரித்​துள்ளது.

தமிழகத்​தில் வீடு, வணிக நிறு​வனங்​கள், தொழிற்​சாலைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவு​களுக்​கும் மின்​விநி​யோகம் செய்​யும் பணியை தமிழக மின்​வாரியம் மேற்​கொண்டு வருகிறது. மாநிலம் முழு​வதும் தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்மின்​சாரம் பயன்​படுத்​தப்​படு​கிறது. இந்த மின்​நுகர்வு கடந்த ஏப்ரல் 30-ம் தேதி 45.43 கோடி யூனிட்டாக அதிகரித்​தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது.

இதற்​கிடையே, கடந்த ஆண்டில் மொத்த மின்​நுகர்வு அதிகரித்​துள்ளது. இதுகுறித்து மின்​வாரிய அதிகாரிகள் கூறிய​தாவது: சுற்றுச்​சூழல் மாசுபடுவதை தடுக்​க​வும், பெட்​ரோல், டீசலால் ஏற்படும் செலவை குறைக்​க​வும், தற்போது பலரும் மின்சார வாகனங்களை அதிக அளவில் பயன்​படுத்தி வருகின்​றனர். கடந்த 2023-24-ம் ஆண்டில் தமிழகம் முழு​வதும் 193 சார்​ஜிங் மையங்​களில் 35 லட்சம் யூனிட்மின்​சாரம் பயன்​படுத்​தப்​பட்​டது. தவிர, கடந்த மார்ச்​சில் மக்களவை தேர்தல் பிரச்​சாரம் நடைபெற்​றது.

அடுத்​த​தாக, ஏப்ரல், மே மாதங்​களில் கோடை வெயில் சுட்​டெரித்​த​தால் வீடு​களில் ஏசி, மின்​விசிறி உள்ளிட்ட மின்​சாதனங்​களின் பயன்​பாடு அதிகரித்​தது. மின்​நுகர்வு 11,096 கோடி யூனிட் இதுபோன்ற காரணங்​களால் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2023-24 நிதி ஆண்டில், தமிழகத்​தின் மொத்த மின்​நுகர்வு 11,096 கோடி யூனிட்டாக அதிகரித்​துள்ளது. 2022-23 நிதி ஆண்டின் மொத்த மின்​நுகர்வான 10,354 கோடி யூனிட்​டை விட இது 742 கோடி யூனிட் அதிகம். இவ்​வாறு அதிகாரி​கள் தெரி​வித்​தனர்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்