கடலூர் / விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கடலூர் மாவட்டத்தில் 17 நிவாரண முகாம்களில், 703 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கடலூர் புருஷோத்தம்மன் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணியை நேற்று பார்வையிட்டு, அந்தப் பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 256 பேருக்கு பிஸ்கெட், பால், அரிசி, பிரட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும், பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, போக்குவரத்தை சீரமைக்குமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
» திண்டிவனம் அருகே வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு பழனிசாமி ஆறுதல்
» மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசை கோரியது திமுகதான்: அண்ணாமலை குற்றச்சாட்டு
அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், பொன்முடி, எஸ்.எஸ்.சிவசங்கர், செந்தில் பாலாஜி, எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன், சபா.ராஜேந்திரன், கடலூர் மேயர் சுந்தரி ராஜா, ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார், துணை மேயர் தாமரைச்செல்வன் உடனிருந்தனர்.
நரிக்குறவர்கள் கோரிக்கை: முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அங்குள்ள அரசுப் பள்ளியில் தங்கியிருந்த நரிக்குறவர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் உணவு உள்ளிட்டவற்றை வழங்கினார். அப்போது நரிக்குறவர்கள், தங்களுக்கு நிலப்பட்டா வழங்கி, கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்குமாறு வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை முதல்வர் உறுதியளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago