விழுப்புரம்: திண்டிவனத்தில் ஜேசிபியில் சென்று அதிமுக எம்எல்ஏ மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.
திண்டிவனத்தில் 38 சென்டி மீட்டர் அளவுக்கு மழை செய்ததால் கிடங்கல் ஏரி முழுவதுமாக நிரப்பி அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் வெள்ளம் போல் சாலைகளில் ஓடுகிறது. இதனால் கிடங்கல் ஏரி பகுதியை ஒட்டியுள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் சூழப்பட்டுள்ளது.
காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி ஊருக்குள் நுழைந்ததால் திண்டிவனம் நகரில் உள்ள வகாப் நகர், இந்திரா நகர், வசந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் நீண்ட நேரம் தவித்து வருகின்றனர்.
» “நீக்கப்பட்டவர்களை சேர்ப்பது தொடர்பான பேச்சு நடந்துட்டுதான் இருக்கு!” - செங்கோட்டையன் பளிச் பேட்டி
» விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரிக்கு இன்று ‘ரெட் அலர்ட்’
இதனை அறிந்த திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜூணன் வாகாப் நகர் பகுதியில் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்களை ஜேசிபி வாகனத்தில் சென்று ஆறுதல் கூறி, நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார். அப்போது நகர செயலாளர் தீன தயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட அதிமுகவினர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago