சென்னை: சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100% பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிடடுள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆவின் நிறுவனம் எடுத்த அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்களுக்கு தேவையான பால் 100% விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று சுமார் 15 இலட்சம் லிட்டர் பால் , 25,000 பாக்கெட் UHT பால் மற்றும் 10,000 கிலோ பால் பவுடர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கனமழை இருந்த போதிலும் பால் விநியோகத்தில் எவ்வித சிறு தடையும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் சென்னை மாநகராட்சி உடன் இணைந்து தேவைப்படும் முகாம்களுக்கு உடனடியாக ஆவின் பால், பால் பவுடர் மற்றும் UHT பால் உடனுக்குடன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
» கனமழை: சென்னையில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு
» சென்னை, புறநகர் அரசு மருத்துவமனைகளுக்குள் புகுந்த மழைநீர்: நோயாளிகள் கடும் அவதி
சென்னை முழுவதும் உள்ள அனைத்து பாலகங்களிலும் பால் மற்றும் பால் பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைத்து விற்பனை நடைபெற்று வருகிறது.மேலும் பொது மக்களுக்கு பால் எளிதில் கிடைக்க 8 ஆவின் பாலகங்கள் மூலமாக 24 மணி நேரமும் பால் விநியோகம் நடைபெற்று வருகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல். மாமல்லபுரம் - புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது. இதனால் வட கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்றும் வட கடலோர மாவட்டங்களில் மழை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100% பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago