நீலகிரி மாவட்டத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் குடியரசு தலைவர் முர்மு

By செய்திப்பிரிவு

உதகை: நீல​கிரி மாவட்​டத்​தில் 4 நாட்கள் சுற்றுப்​பயணம் முடிந்ததையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லி திரும்​பினார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரி​யில் அதிகாரி​களுடன் கலந்​துரை​யாடல் உள்ளிட்ட நிகழ்ச்​சிகளில் கலந்து கொள்​வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்​பயணமாக கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டம் வந்தார்.

உதகை ராஜ்பவனில் தங்கி​யிருந்த அவர், கடந்த 28-ம் தேதி முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி​யில் நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் அதிகாரி​களுடன் கலந்​துரை​யாடி​னார். மேலும், போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்​களுக்கான நினை​வுத்​தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்​தினார். போரில் உயிரிழந்​தவர்​களின் குடும்பத்​தினருக்கு விருது வழங்கி கவுர​வித்​தார்.

இதையடுத்து, நேற்று முன்​தினம் மாலை நீலகிரி மாவட்டத்​தில் வாழும் 6 வகையான பண்டைய பழங்​குடியின மக்களை உதகை ராஜ்பவனில் சந்தித்​தார். அப்போது, பழங்​குடியின மக்கள் அமைத்​திருந்த அரங்​கு​களில் இருந்த, பழமையான பொருட்கள் குறித்து ஆர்வ​முடன் கேட்​டறிந்​தார். மேலும், பழங்​குடியின மக்களின் நடனங்களை கண்டு ரசித்தார். முடி​வில் அவர்​களுடன் குழு புகைப்​படம் எடுத்​துக்​கொண்டு, உணவருந்​தினார்.

தொடர்ந்து, உதகை ராஜ்பவன் மாளி​கை​யில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று மரக்​கன்று நட்டு, தண்ணீர் ஊற்றினார். அப்போது, தமிழக ஆளுநர் ஆர்.என்​.ரவி, அவரது மனைவி லட்சுமி, பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்​யநாதன் ஆகியோர் உடனிருந்​தனர்.

இந்நிலை​யில், 4 நாட்கள் சுற்றுப்​பயணம் முடிந்து குடியரசுத் தலைவர் நேற்று காலை உதகை ராஜ்பவன் மாளி​கை​யில் இருந்து கார் மூலம் கோத்​தகிரி, மேட்டுப்​பாளை​யம், அன்னூர் வழியாக கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்​பினார்.

முன்ன​தாக, ராஜ்பவன் மாளி​கை​யில் ஆளுநர் ஆர்.என்​.ரவி, தமிழக அமைச்சர் மெய்​யநாதன், ஏடிஜிபி ஜெயராமன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா,
மாவட்ட காவல் கண்காணிப்​பாளர் நிஷா ஆகியோர் குடியரசுத் தலைவரை வழியனுப்பி வைத்​தனர். உதகை​யில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. உதகை ராஜ் பவன் மாளி​கையி​லிருந்து கிளம்பிய குடியரசுத் தலைவர் வாகனம் மற்றும் பாது​காப்பு வாகனங்கள் வழக்​கத்​தைவிட மிகவும் மெது​வாக, முகப்பு விளக்​குகளை எரிய​விட்​டபடி 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்​தில் சென்றன.

இதனால் காலை​யில் 10:10 மணிக்கு ராஜ்பவன் மாளி​கை​யில் இருந்து கிளம்பிய குடியரசுத் தலைவர் வாகனம் கோவை மாவட்ட எல்லைக்​குள் 12.12 மணிக்கு சென்​றது. வழக்​கமாக உதகை​யில் இருந்து கோவை ​மாவட்ட எல்​லைக்​குச் செல்ல 1.30 மணி நேரம் ஆகும் நிலை​யில், வாக​னம் மெது​வாகச் சென்​ற​தால் நேற்று 2 மணி நேர​மானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்